ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-10 18:46 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஊராட்சி மன்ற நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் பல்வேறு ஊராட்சிகளில் பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பட்டியல் இன தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில் சாதி பாகுபாடு மற்றும் பாலின பாகுபாடு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். நீங்கள் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது இன்னும் உள்ள 2 ஆண்டுகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண் தலைவர்கள் முழுமையாக பணியாற்ற முன்வர வேண்டும். வீட்டை பராமரிக்கும் பெண்கள் உங்களுக்கு ஊரை பராமரிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல நிர்வாகத்தில் உங்கள் கணவர்கள் ஆதரவு அளிக்கலாம். ஆனால் அதிகாரத்தில் தலையிடக்கூடாது. ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் குறித்து முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்