மதுபாட்டில்கள், சாராயம் கடத்தியவர் கைது

திருவெண்காட்டில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்தியவர் கைது மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2023-01-08 18:45 GMT

திருவெண்காடு:

திருவெண்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவடிகள், ராதா ஆகியோர் கொண்ட குழுவினர் திருவெண்காடு பகுதியில் உள்ள பெருந்தோட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். பின்னர் அதில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பொறையாறை சேர்ந்த விஜயகுமார் (வயது 62) என்பதும், புதுச்சேரியில் இருந்து 180 மதுபாட்டில்கள், 50 ஐஸ் பாக்கெட் மதுபானம் மற்றும் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் மேட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்