சினிமா பாணியில் டோல்கேட் தடுப்பை உடைத்துச் சென்று லாரியை திருட முயன்ற நபர் கைது
சினிமா பாணியில் டோல்கேட் தடுப்புகளை உடைத்துக் கொண்டு லாரியை திருடிச் சென்ற காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.;
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் செடுஞ்சாலையில் பார்சல் ஏற்றி வந்த தனியார் நிறுவன லாரியின் ஓட்டுநர், லாரியை நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியை திருடிச் சென்றுள்ளார்.
மேலும் அந்த நபர், சினிமா பாணியில் டோல்கேட் தடுப்புகளை உடைத்துக் கொண்டு லாரியை திருடிச் சென்ற காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இதனிடையே லாரி ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், ஜக்கம்பேட்டை என்ற இடத்தில் லாரியை போலிசார் மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து லாரியை திருடிச் சென்ற நபரை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.