படகு கட்டும் நிறுவனத்தில் எந்திரங்கள் திருடியவர் கைது

படகு கட்டும் நிறுவனத்தில் எந்திரங்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-09-26 18:45 GMT

புதுக்கடை:

ஆற்றூர் அருகே உள்ள சிதறால் பகுதியை சேர்ந்தவர் டேவிட். இவருடைய மகன் ராபர்ட் (வயது 45). இவர் இனயம் இனியாநகர் பகுதியில் படகு கட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார். ராபர்ட் தினமும் நிறுவனத்தில் பணிகளை மேற்கொண்டு விட்டு இரவு நிறுவனத்தை பூட்டி விட்டு செல்வது வழக்கம்.

சம்பவத்தன்றும் ராபர்ட் நிறுவனத்தில் பணிகளை முடித்து விட்டு இரவு பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்தபோது, நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு இருந்த படகு கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கட்டிங் எந்திரம், சுவிட்ச் போர்டு உள்ளிட்ட பொருட்கள் மாயமாகி இருந்தன. நிறுவனத்தின் பூட்டை உடைத்து மர்ம நபர் எந்திரங்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராபர்ட் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜேசு ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் இரணியல் அருகே உள்ள சித்தன்தோப்பு பகுதியைச் சேர்ந்த இயேசு அடிமையின் மகன் ஜஸ்டின் ஆன்ரோவின் உருவம் பதிவாகி இருந்ததும், தற்போது அவர் இனயம் பகுதியில் உள்ள மாதா காலனியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து ேபாலீசார் ஜஸ்டின் ஆன்ேராவை பிடித்து விசாரணை நடத்தினார். அதில் அவர் படகு கட்டும் நிறுவனத்தில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் ஜஸ்டின் ஆன்ரோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்