பார் ஊழியரை கத்தியால் குத்தியவர் கைது
பார் ஊழியரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்;
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 24). இவர் செல்லூர் வைகை வடகரை பகுதியில் வாடகை வீட்டில் தங்கி அங்குள்ள மதுக்கடை பாரில் வேலை பார்த்து வருகிறார். அவர் வசிக்கும் வீட்டின் மாடியில் வைரமுத்து (42) என்பவர் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று வைரமுத்துவிற்கும், விஷ்ணுவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வைரமுத்து கத்தியை எடுத்து விஷ்ணுவை குத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைரமுத்துவை கைது செய்தனர்.