1,150 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர் கைது

கள்ளச்சந்தையில் விற்பதற்காக 1,150 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-06-25 19:36 GMT

தஞ்சாவூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் படி புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில், புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரிமளம் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி அந்த வீட்டில் சோதனையிட்டனர். இதில் மாங்குடியார் (வயது 75) என்பவர் வீட்டின் பின்பகுதியில் 1,150 கிலோ ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாங்குடியாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்