பருப்பு மில்லில் ரூ.9 லட்சம் மோசடி செய்தவர் கைது
பருப்பு மில்லில் ரூ.9 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
விருதுநகர் கச்சேரி ரோட்டில் பருப்பு மில் வைத்திருப்பவர் வெங்கடேஷ் (வயது 40). இவரது பருப்பு மில்லில் வேலை பார்த்த அன்னை சிவகாமிபுரத்தை சேர்ந்த ஜெயவேலன் (40) என்பவர் பருப்பு மில்லில் விற்பனை பணம் ரூ.8 லட்சத்து 94 ஆயிரத்து 900-த்தை மோசடி செய்ததாகவும், மோசடி செய்த பணத்தில் வீடு கட்டியதாகவும், ஆடம்பர செலவு செய்ததாகவும், இதற்கு அவரது பெற்றோர் ஜெயராஜ், தனலட்சுமி மற்றும் பருப்புமில்லில் வேலை பார்த்த விக்னேஷ், சதீஷ் ஆகிய 4 பேரும் உடந்தையாக இருந்ததாக விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்திருந்தார். அதன் பேரில் மேற்படி 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில் ஜெயவேலன் தலைமறைவானதை தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்தனர். இதையடுத்து நேற்று ஜெயவேலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.