மாமனார்-உறவினரை அரிவாளால் தாக்கியவர் கைது

மாமனார்-உறவினரை அரிவாளால் தாக்கியவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-18 18:24 GMT

குளித்தலை அருகே உள்ள மேல பணிக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவா்் சந்திரசேகர் (வயது 33). இவரது மனைவி கோகிலா. குடும்ப பிரச்சினை காரணமாக சந்திரசேகர், கோகிலாவின் தலைமுடியை பிடித்து இழுத்து தகாத வார்த்தைகள் கூறி திட்டி கொண்டிருந்தார். இந்தகராறை அங்கு வந்த கோகிலாவின் தந்தை வேலுச்சாமி மற்றும் வேலுச்சாமியின் மூத்த மகள் சரண்யாவும் (28) தடுத்து கேட்டுள்ளனர்.

அப்போது வேலுச்சாமியிடம் பிரச்சினை உன்னால் தான் வருகிறது என சந்திரசேகர் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். பின்னர் தனது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து அரிவாளின் பின்பகுதியால் வேலுச்சாமியின் தலையில் தாக்கியுள்ளார். அதேபோல சரண்யாவையும் தாக்கி ரத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதில் காயமடைந்த வேலுச்சாமி, சரண்யா ஆகியோரை அங்கிருந்த உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வேலுச்சாமி கொடுத்த புகாரின் பேரில் சந்திரசேகர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்