தாய், மகளை தாக்கியவர் கைது
ஆண்டிமடம் அருகே தாய், மகளை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.;
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நேரு. இவரது மனைவி மகாலட்சுமி (வயது 45). இவரது மகள் மணிபாரதி. சம்பவத்தன்று தாய், மகள் தங்களது வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரசேகர் (45) என்பவர் மகாலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதை தட்டிக்கேட்க வந்த மணிபாரதியை அடித்து கீழே தள்ளியுள்ளார். மேலும், இதனை தடுக்க வந்த மகாலட்சுமியையும் அவர் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மகாலட்சுமி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்குப்பதிவு செய்து தாய், மகளை தாக்கிய வீரசேகரனை கைது செய்தார்.