பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர் கைது

கபிஸ்தலம் அருகே பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-01-30 20:54 GMT

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கபிஸ்தலம் அருகே உள்ள தியாக சமுத்திரம், அக்ரஹாரம் பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளி பழனி (வயது43) தியாகசமுத்திரம் மெயின் ரோட்டில் நின்று கொண்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தகாத வார்த்தைகளால் பொதுமக்களுக்கு இடையூறாக நின்று திட்டிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து பழனியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்