முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் புலி உயிரிழப்பு...!
முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 11 வயது பெண் புலி உயிரிழந்து உள்ளது.;
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகம், 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு காட்டுயானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இது தவிர முகாம்களில் வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 11 வயது பெண் புலி சேற்றில் சிக்கி இறந்த கிடந்தது. இதை அறிந்த வனத்துறையினர் அதே இடத்தில் புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதே இடத்தில் எரியூட்டப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் வயது முதிர்வு, நுரையீரல் பாதிப்பு காரணமாக புலிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.