தண்டவாளத்தில் ஆண் பிணம்

தண்டவாளத்தில் ஆண் பிணம் மீட்கப்பட்டது.;

Update: 2023-09-25 21:29 GMT

காரியாபட்டி, 

திருச்சுழி அருகே புலியூரான் எம்.தொட்டியன்குளம் இடையே ரெயில்பாதையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக தகவல் அறிந்த விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அந்த நபர் ரெயிலில் அடிபட்டு இறந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதுபற்றி மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் சம்பவ இடத்திற்கு விரைந்தார். சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்த திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதனுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்