முருகர் கோவில் குளத்தில் ஆண் பிணம்
சோமாசிபாடி முருகர் கோவில் குளத்தில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே சோமாசிபாடியில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகர் கோவில் குளத்தில் இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது.
இதுகுறித்து சோமாசிபாடி கிராம நிர்வாக அலுவலர் சாவித்திரி கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று குளத்தில் மிதந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் வழக்குப் பதிந்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகிறார்.