கடையம்:
கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் முத்தன் தெருவில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் அந்த பகுதியில் யாசகம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அவர் யார்? எந்த ஊரைச் சார்ந்தவர்? எவ்வாறு இறந்தார் என்பது தெரியவில்லை. அவரை உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்்திரிக்கு அனுப்பி வைத்தனர்.