அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலத்தை மலேசிய மாணவர்கள் பார்வையிட்டனர்

மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலத்தை மலேசிய மாணவர்கள் பார்வையிட்டனர்.;

Update:2023-10-26 02:30 IST

மேலூர்,

தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக மேலூர் அருகே அரிட்டாபட்டியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு இடங்களில் இருந்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் அரிட்டாபட்டிக்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இங்கு ஏழுமலைகளில் அபூர்வ பறவைகள் உள்பட பல்லுயிர்களும், வரலாற்று குடவரை கோவில் எழுத்துக்கள் உள்ளன. இவற்றை பார்வையிட மலேசியா மாஷா கல்லூரி மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவ-மாணவிகள் பேராசிரியர் ஆன்ட்ருபிரதீப் தலைமையில் வந்து பார்வையிட்டனர். அரிட்டாபட்டி பறவைகள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர், ஏழுமலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் ரவிச்சந்திரன் மாணவ- மாணவிகளுக்கு பல்லுயிர்களையும், வரலாற்று சின்னங்களையும் காண்பித்து விளக்கம் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்