புன்னக்காயலில் மலேரியா தடுப்பு மருந்துதெளிப்பு

புன்னக்காயலில் மலேரியா தடுப்பு மருந்துதெளிக்கப்பட்டது.;

Update: 2023-09-15 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆத்தூர் அருகே உள்ள புன்னைக்காயல் மீனவ கிராமத்தில் சுகாதாரத்துறை சார்பில் வீடு வீடாக சென்று வீட்டில் உட்புறமும், வெளிப்புறமும் மலேரியா தடுப்பு மருந்து தெளிப்பு பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற்செல்வன் ஆய்வு செய்தார். மேலும் தெருக்களில் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார்.

இப்பணியில் ஆழ்வார்திருநகரி வட்டார சுகாதாரத்துறை டாக்டர் பார்த்திபன், மாவட்ட மலேரியா கருப்பு அலுவலர் கருப்பசாமி, ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சரஸ்வதி, சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மகாராஜன், சுபாஷ், அரிராமச்சந்திரன், ஜான் நியூமன், ஞானராஜ் உட்பட பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்