மகர விளக்கு பூஜை: கொல்லம்-சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்- தெற்கு ரெயில்வே

மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Update: 2024-01-14 07:50 GMT

சென்னை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நாளை மாலை நடைபெற உள்ளது. மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், மகர விளக்கு பூஜையையொட்டி, பக்தர்களின் வசதிக்காக கொல்லம்-சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரெயிலானது (06032/06031) வருகிற 16-ந்தேதி காலை 3 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னை வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் அன்று இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் கொல்லம் சென்றடையும். இந்த ரெயிலானது பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்