பழனி அருகே மக்காச்சோளம் சாகுபடி பணி தீவிரம்

பழனி அருகே மக்காச்சோளம் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2022-08-27 16:03 GMT

பழனியை அடுத்த கணக்கன்பட்டி, கோம்பைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்தநிலையில் பருவமழையை எதிர்பார்த்து இங்குள்ள நிலங்களை விவசாயிகள் உழுது தயார் நிலையில் வைத்திருந்தனர். இந்தநிலையில் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி மானாவாரி நிலங்களில் மக்காச்சோள விதைப்பு பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தற்போது மானாவாரியாக மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட விதையை விதைத்து வருகிறோம். இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்