பராமரிப்பு பணி: கொட்டாம்பட்டி, சக்குடி பகுதிகளில் இன்று மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக கொட்டாம்பட்டி, சக்குடி பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுகிறது.;

Update: 2023-10-25 21:23 GMT


பராமரிப்பு பணி

மதுரை தனியாமங்கலம், உறங்கான்பட்டி துணை மின்நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, அந்த துணைமின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கீழையூர், கீழவளவு, செம்மினிப்பட்டி, கொங்கம்பட்டி, முத்து சாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலையப்பட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர் மற்றும் தர்மதானபட்டி, கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளினிப்பட்டி, வி.புதூர், சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளப்பட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சக்குடி

இதுபோல், இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை உறங்கான்பட்டி துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, வரிச்சியூர், களிமங்கலம், சக்குடி, விளத்தூர், ஓடைப்பட்டி, ராஜாக்கூர், இளமனூர், சக்கிமங்கலம், கார்சேரி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்