மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள்

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2023-09-24 18:45 GMT

திருவெண்காடு:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பேரிலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குனர் ஸ்ரீலேகா மேற்பார்வையில், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சட்டநாதபுரம், திருவெண்காடு, நாங்கூர், புங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் மகாத்மாகாந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வாய்க்காலை தூர்வாரி மழை நீர் தேங்கிட ஏதுவாக உறிஞ்சு குழி அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், மக்கும், மக்காத குப்பை சேகரித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) இளங்கோவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் முழுமையான அளவிற்கு பணியை ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். இதில் ஏதேனும் தவறுகள் நடக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமுத்து, மக்கள் நல பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்