மகாமாரியம்மன் கோவில் குடமுழுக்கு

திருவளர்மங்கலம் கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.

Update: 2022-09-09 16:34 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி திருவளர்மங்கலம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன், விநாயகர், பாலமுருகன், காத்தவராயன், வீரன், பெரியாச்சி கோவில் குடமுழுக்கு நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், லெட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் நடந்தது. இதை தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

இதே போல் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் குடமுழுக்கு நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக கணபதி, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், ஆய்வாளா், பொறுப்பாளா்கள், கிராம நாட்டாண்மைகள், உபயதாரா்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்