இன்று மகா சிவராத்திரி:சேலத்தில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு-குண்டு மல்லி ரூ.1,000-க்கு விற்பனை

மகா சிவராத்திரி விழாவையொட்டி சேலத்தில் பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. இதில் குண்டு மல்லி பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது.

Update: 2023-02-17 22:45 GMT

பூக்கள் விலை உயர்வு

சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, கன்னங்குறிச்சி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பல பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

சுபமுகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று பூக்களின் விலை கிடு,கிடு என உயர்ந்தது. எனினும் மார்க்கெட்டில் பூ வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ரூ.1,000-க்கு விற்பனை

கடந்த வாரத்தை விட நேற்று சில பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்து இருந்தது. கடந்த கிலோ ரூ.500-க்கு விற்ற குண்டு மல்லி நேற்று ரூ.1,000-க்கு விற்பனையானது. கடந்த வாரம் கிலோ ரூ.400 வரை விற்ற சன்னமல்லி நேற்று ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் சம்பங்கி கிலோ ரூ.200-க்கும், அரளி, வெள்ளை அரளி, மஞ்சள் அரளி, ஐ.செவ்வரளி ஆகியவை கிலோ ரூ.240-க்கும், செவ்வரளி ரூ.300-க்கும், நந்தியாவட்டம் ரூ.160-க்கும் விற்பனையானது. மேலும் காக்கட்டான், கலர் காக்கட்டான் ஆகியவை ரூ.450-க்கும், மலைக்காட்டன் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்