திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி

திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி;

Update: 2023-02-15 19:25 GMT

கபிஸ்தலம் அருகே உள்ள திருவைகாவூர் ஊராட்சியில் வில்வவனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 10-ந் தேதி பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. விழாவில் 18-ந்தேதி இரவு சிறப்பு 4 கால பூஜையும், 19-ந்தேதி காலை 7 மணிக்கு சாமி வீதி உலாவும் நடக்கிறது. 20-ந்தேதி அமாவாசை அன்று மதியம் 12 மணிக்கு எமக்குளத்தில் தீர்த்த வாரியும், இரவு 7 மணிக்கு தேவார இன்னிசையுடன் ஓலைச்சப்பரத்தில் சாமி வீதி உலா வாணவேடிக்கையுடன் நடைபெற உள்ளது. முன்னதாக 18-ந்தேதி இன்னிசை நிகழ்ச்சியும், பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் ஆய்வாளர் லட்சுமி, செயல் அலுவலர் ஹாசினி, கோவில் அர்ச்சகர் ஹரிஹரன் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராமமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்