சொக்கநாதசுவாமி கோவிலில் மகா ருத்ர ஹோமம்
விருதுநகர் சொக்கநாதசுவாமி கோவிலில் மகா ருத்ர ஹோமம் நடைபெற்றது.;
விருதுநகர்,
விருது நகர் சொக்கநாத சுவாமி கோவிலில் மகா ருத்ர ஹோமம் நேற்று தொடங்கியது. அனைத்து ஜீவராசிகளும் எல்லா வளமும் பெற்று இன்புற்றிருப்பதற்காக 3 நாட்கள் இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. முதல் நாளான நேற்று சோடச மகா கணபதிஹோமத்துடன் கோ பூஜை, கஜ பூஜை மற்றும் அஸ்வ பூஜை ஆகியவற்றுடன் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.