மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

குத்தாலம் அருகே மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்;

Update:2022-05-23 22:30 IST

குத்தாலம்:

குத்தாலம் மேலமங்கை நல்லூரில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 13-ந்தேதி பூச்சொரிதலுடன் த்டங்கியது. திருவிழாவையொட்டி அம்மனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. 10-ம் நாள் திருவிழாவான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக, வீரசோழன் ஆற்றில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர், கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அலகு காவடி எடுத்து வந்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன் ஆனந்த நடனமாடி கோவிலை சுற்றி வந்தனர். பெண்கள் மாவிளக்கு படையலிட்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில அம்மன் எழுந்தருளி வீதிஉலா சென்றார். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்