மகா மாரியம்மன் வீதி உலா

மகா மாரியம்மன் வீதி உலா நடந்தது.;

Update: 2023-08-01 18:25 GMT

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் சித்தேரிக்கரையில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சாமி வீதி உலா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வீதி உலாவையொட்டி கடந்த 28-ந் தேதி காலை 10.30 மணியளவில் அஷ்டபுஜ துர்க்கை அம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. 29-ந் தேதி மாலை 3 மணியளவில் முளைப்பாரி மற்றும் பூச்சொரிதல், ஊர்வலம் பெரிய ஏரி கீழ் கரையில் இருந்து புறப்பட்டு சென்று கோவிலை வந்தடைந்தது. 30-ந் தேதி இரவு மகா மாரியம்மன் வீதி உலா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்