திருமண நாளன்று மாயமான வாலிபர் கைது

திருமண நாளன்று மாயமான வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-06-04 19:24 GMT

திருவெறும்பூர்,ஜூன்.5-

திருச்சியை அடுத்த அந்தநல்லூர் ஒன்றியம் கிளிக்கூடு கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் தேனீஸ்வரன் (வயது 27). இவருக்கும் துவாக்குடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 3-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் திருமணநாள் அன்று மணமகன் திடீரென மாயமானார். இது குறித்து மணமகனின் குடும்பத்தினர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணநாள் அன்று மாயமான தேனீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்