மாயமான 10-ம் வகுப்பு மாணவி சென்னையில் மீட்பு
கீரமங்கலம் அருகே மாயமான 10-ம் வகுப்பு மாணவி சென்னையில் மீட்கப்பட்டார்.;
கீரமங்கலம் அருகே 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்த ஒரு மாணவி நேற்று முன்தினம் மாலை முதல் காணவில்லை என்று அவரது பெற்றோர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த மாணவியின் விவரங்களை சேகரித்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரெயில்நிலைய நடைமேடையில் அமர்ந்திருந்த அந்த மாணவியிடம் ரெயில்வே போலீசார் விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவரது பெற்றோரின் செல்போன் எண்ணை பெற்று தகவல் கொடுத்த ரெயில்வே போலீசார் மாணவியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.