தேசிய போட்டியில் வெற்றி பெற்ற மதுரை மாணவிகள்
தேசிய போட்டியில் வெற்றி பெற்ற மதுரை மாணவிகள்
மதுரை,
இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் 4-வது தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் உத்திரபிரதேசம் மாநிலம் மதுராவில் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் தமிழகத்தில் இருந்து யோகா, சிலம்பம், அத்லெட்டிக், எடை தூக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். போட்டியில் 20 தங்கம், 16 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்களை வென்றனர். சாதித்த மாணவிகள் மதுரை ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தனர். அப்போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற இந்த மாணவிகள் உலக அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்ள உள்ளனர்.