தங்கம், வெள்ளி பதக்கங்கள் வென்ற மதுரை வீரர்கள்

நேபாளத்தில் நடந்த விளையாட்டு போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை மதுரை வீரர்கள் வென்றனர்.;

Update:2023-10-23 00:15 IST

திருப்பரங்குன்றம்,

தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு சங்கம், இந்திய இளைஞர் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நேபாளத்தில் நடந்த சர்வதேச இளையோர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை திருநகர் மதர் குளோப் ரெவல்யூசனரி கால்பந்து அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் 19 வயது பிரிவில் கைப்பந்து போட்டியில் வீரர்கள் கவுதம், ரேத்சின் பிரைட், ஜெயசாலின், தர்சன், சாந்தனு, சன்ரோசன், ஹாரிகிரிஸ்னன் ஆகியோர் நேபாளத்தில் களம் இறங்கி விளையாடி வெள்ளி பதக்கம் வென்றனர்.

இதே போல பேட்மின்டன் போட்டியில் 14 வயது பிரிவில் கோகுல் நாத், 19 வயது பிரிவில் சந்தோஷராம் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

சிலம்ப போட்டியில் விவேதா, துசித்தா, தானுசிரி ஆகியோர் தங்கம் வென்றனர். இவர்களை இளையோர் விளையாட்டு சங்க பொதுச்செயலாளர் அன்பரசன், தலைமை பயிற்சியாளர் குமார்ஆகியோர் பாராட்டினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்