மதுரை மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா
மதுரை மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
மதுரை,
மதுரை மருத்துவ கல்லூரியின் 2016-ம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கருப்பாயூரணி பகுதியில் உள்ள மகாலில் நடந்தது. மருத்துவ கல்லூரி முதல்வரும், அரசு ஆஸ்பத்திரி டீனுமான ரத்தினவேல் தலைமை தாங்கினார். துணை முதல்வர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரவிந்த் கண்மருத்துவமனை தலைவர் நம்பெருமாள்சாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவ கண்காணிப்பாளர் விஜயராகவன், டாக்டர்கள் பாப்பையா, அருள் சுந்தரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் 150 மருத்துவ மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.