நியோமேக்ஸ் நிறுவனம் மீதான புகார்களில் சுமுக தீர்வு காண நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரி வழக்கு-போலீசார் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நியோமேக்ஸ் நிறுவனம் மீதான புகார்களில் சுமுக தீர்வு காண நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரி வழக்கு என போலீசார் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;

Update: 2023-08-07 20:13 GMT


நியோமேக்ஸ் நிறுவனம் மீதான புகார்களில் சுமுக தீர்வு காண நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரி வழக்கு என போலீசார் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மனு

நியோமேக்ஸ் பிராப்பர்ட்டிஸ், டிரிடாஸ், குளோமேக்ஸ், கார்லேண்டோ, டிரான்ஸ்கோ ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், அசோக்மிட்டா, சார்லஸ் உள்ளிட்டவர்கள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனம் மதுரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் துணை நிறுவனங்கள் பல்வேறு ஊர்களில் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் கிரையம் செய்யப்பட்டு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வீட்டு மனைகளாக மாற்றி விற்கிறோம்.

இதுசம்பந்தமாக வாடிக்கையாளர்களிடம் முழு விவரங்களையும் தெரிவித்து, அவர்கள் சம்மதத்துடன் நடவடிக்கை எடுக்கிறோம். தற்போது ஏராளமான நிலங்கள் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகளாக தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.

குழு அமைக்க வேண்டும்

ஆனால் நாங்கள் மோசடிகளில் ஈடுபட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து உள்ளனர். அதன்பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். சிலரை கைது செய்து உள்ளனர். இதனால் எங்கள் நிறுவனம் பாதிக்கப்படுகிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில் புகார்தாரர்களின் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி நாகார்ஜூன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாணையை ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்