மதுரை வேளாண்மை கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் தொடக்க விழா

மதுரை வேளாண்மை கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.

Update: 2023-06-24 20:41 GMT


மதுரை வேளாண்மை கல்லூரி 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் பல்வேறு துறைகளில் மிக உயர்ந்த பொறுப்புகளை வகித்துள்ளனர். கடந்த காலத்தில், மதுரை வேளாண்மைக் கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்காக முன்னாள் மாணவர்கள் சங்கம் என்ற அமைப்பு ஏதும் இல்லாதிருந்த நிலையில் தற்போது முன்னாள் மாணவர்கள் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. சங்கத்திற்கு கல்லூரி முதல்வர் தலைவராக அறிவிக்கப்பட்டார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலின் வாயிலாக, முன்னாள் மாணவர் மோகன் துணைத்தலைவராகவும், தவசுமுத்து செயலாளராகவும், மணிசேகரன் துணை தலைவராகவும், சண்முகம் பொருளாளராகவும் மற்றும் 5 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் மாணவர்கள் சங்க அலுவலகத்தை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து வாழ்த்தினார். நிகழ்ச்சியில், வேளாண்மை கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்