மதுரை-சண்டிகர் விரைவு ரெயில் தாமதமாக புறப்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மதுரை-சண்டிகர் விரைவு ரெயில் தாமதமாக புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.;
மதுரை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
மதுரை -சண்டிகர் விரைவு ரெயில்(12687), நாளை அதிகாலை 02.30 மணிக்கு புறப்படும். இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் நாளை காலை புறப்படும். இணை ரெயில் தாமதமாக வருவதால் சுமார் 3 மணிநேரம் தாமதம் அடைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.