மதுரை பட்டாலியன் போலீஸ்காரர் கைது

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்த வழக்கில் மதுரை பட்டாலியன் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-26 20:13 GMT

மதுரை

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்த வழக்கில் மதுரை பட்டாலியன் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

பெண் தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கீழப்பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 26). மதுரை 6-வது சிறப்பு பட்டாலியன் படை போலீஸ்காரர். இவரது மனைவி திவ்யா(24). இவர்கள் இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஆயுதப்படை பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

திருமணம் முடிந்த சில நாட்களில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி திவ்யா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரின் தாயார் சித்திரை செல்வி தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதில் வரதட்சணை கொடுமை மற்றும் மாரிமுத்துவின் நடத்தை காரணங்களால் திவ்யா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து இருந்தார்.

போலீஸ்காரர் கைது

அதன் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்தது. விசாரணையில், திவ்யாவுக்கு வரதட்சணை கொடுமை நடந்தது உறுதியானது.

அதை தொடர்ந்து ஆர்.டி.ஓ., பரிந்துரைபடி தல்லாகுளம் போலீசார், வரதட்சணை கொடுமை மற்றும் அதன் காரணமாக இறப்பு ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் மாரிமுத்துவை கைது செய்தனர். மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்