பிரதமர் மோடியுடன் மதுரை ஆதீனம் சந்திப்பு

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை மதுரை ஆதீனம் சந்தித்து பேசினார்.

Update: 2022-05-26 17:42 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் ரூ. 31 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் மத்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் 11 மக்கள் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தாா். இந்த நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என். ரவி, மத்திய மந்திரி எல். முருகன் ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல். முருகன் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சி நிறைவு பெற்றதை அடுத்து சுமார் 8 மணியளவில் டெல்லிக்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மதுரை ஆதீனம் சந்தித்து பேசினார். முன்னதாக தருமபுரம் ஆதின பட்டின பிரவேசம் பிரச்சனையில் என்னை ஆளுங்கட்சியினர் மிரட்டுகிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே பிரதமா் மோடி மற்றும் உள்துறை மந்திாி அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்