தொழில் பாதிப்பால் களை கட்டாத காதலர் தினம்

Update: 2023-02-14 16:54 GMT


திருப்பூரில் தொழில் பாதிப்பு இருப்பதால் காதலர் தின கொண்டாட்டம் களை கட்டவில்லை. பூங்காவிற்கு குறைவான அளவு காதலர்கள் மட்டுமே வந்திருந்தனர்.

செல்போனில் காதலர் தினம்

காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள். ஆம் உண்மையான காதல் ஜாதி, மதம், இனம், நிறம், பணம் என எதையுமே பார்ப்பதில்லை. காதலர்கள் ஒவ்வொரு நாளும் பார்வையாலும், வார்த்தையாலும் அன்பை பரிமாறிக்கொண்டாலும் காதலர் தினத்தில் அவர்கள் உற்சாகமாகவும், உயிரோட்டமாகவும் காதலை பகிர்ந்து மகிழ்கின்றனர். திருப்பூரைப்பொறுத்தவரை இளம் தொழிலாளர்கள் பலர் பனியன் தொழிலில் இருந்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு வருடமும் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவில் இளம் காதல் ஜோடிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தொழிலில் மந்த நிலை இருப்பதால் தொழிலாளர்கள் பலர் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். பலர் செல்போனிலேயே காதலர் தினத்தை முடித்து கொண்டார்களோ என்னவோ? இதனால் மாநகராட்சி பூங்காவில் குறைவான காதலர்களே வந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

திருமணம் முடிந்த தம்பதிகள் சிலரும் பூங்காவிற்கு வந்து காதலர் தினத்தை கொண்டாடினர். பொதுவாக காதலர் தினத்தன்று சில காதல் ஜோடிகள் எல்லை மீறி நடந்து கொள்வார்கள். இதை கருத்தில் கொண்டும் பூங்காவிற்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் வகையிலும் வெள்ளி விழா பூங்காவில் நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று கடந்த காலங்களில் காதலர் தினத்தை எதிர்த்து ஒரு சில போராட்டங்கள் நடந்ததால் அந்த நோக்கத்தில் யாரேனும் வருகிறார்களா? எனவும் தீவிரமாக கண்காணித்தனர். சந்தேகத்திற்கிடமான முறையில் வந்தவர்களிடம் சோதனை நடத்தினர். இதனால் பூங்காவில் காதல் ஜோடிகளின் எல்லை மீறிய லீலைகள் பெரிதாக நடக்கவில்லை.

------

(பாக்ஸ்) ரோஜாதொழில் பாதிப்பால் களை கட்டாத காதலர் தினம்தொழில் பாதிப்பால் களை கட்டாத காதலர் தினம்வை தீண்டாத ராஜாக்கள்

பூங்காவிற்கு காதல் ஜோடிகள் குறைந்த அளவில் வந்திருந்ததால் காதலர்களை நம்பி சாலையோரம் கடை விரித்த ரோஜாப்பூ வியாபாரிகள் எதிர்பார்த்த வியாபாரம் இன்றி ஏமாற்றம் அடைந்தனர். இந்த ஆண்டு ேவலை வாய்ப்பு குறைவாக இருப்பதால் ரோஜாப்பூவை வாங்குவதற்கு காதல் ராஜாக்கள் ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு ஒரு பூ ரூ.100-க்கு விற்கப்பட்ட போதும் விலையை பொருட்படுத்தாமல் காதலர்கள் வாங்கி சென்றனர். ஆனால் நேற்று ஒரு பூ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட போதும் அதை வாங்க ஆளில்லை. வழக்கமாக காலையிலேயே வேகமாக ரோஜாப்பூ விற்பனையாகி விடும் ஆனால் நேற்று சில நேரங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பூ தான் விற்பனையானது. வண்டியில் வைத்த ரோஜாப்பூ கட்டுகள் சில பிரிக்காமலேயே உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்