துப்பட்டாவால் கழுத்தை நெரித்து காதல் மனைவி கொலை -வாலிபர் வெறிச்செயல்

துப்பட்டவால் கழுத்தை நெரித்து காதலித்து திருமணம் செய்த மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-06-09 20:47 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் தேவலாபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் நந்தினி (வயது 27). இவரும், வேலூர் மாவட்டம் பங்காளமேடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (31) என்பவரும் ஒரு 'ஷூ' கம்பெனியில் வேலை செய்தபோது காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் நந்தினி தனது கணவர் மற்றும் மகன்களுடன் தேவலாபுரத்தில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள தாய் வீட்டிற்கு சென்றனர். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்களை குடும்பத்தினர் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

கழுத்தை நெரித்து கொலை

அதைத் தொடர்ந்து நேற்று காலை குடும்பத்தினர் அருகே உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது கணவன்-மனைவி மட்டும் வீட்டில் இருந்தனர். அந்த சமயத்தில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், நந்தினி அணிந்திருந்த துப்பட்டாவை பறித்து அவரது கழுத்தை இறுக்கி உள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்