காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.;
முசிறி:
முசிறி காமராஜ் காலனியை சேர்ந்த மனோகரனின் மகன் மோகன் பிரபு (23). இவர் திருச்செங்கோட்டில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த சின்னசாமியின் மகளும், கல்லூரி மாணவியுமான சந்தியாவும்(20) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சந்தியா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று ஒரு கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் மோகன்பிரபுவும், சந்தியாவும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் முசிறி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் பேசியதில், இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சந்தியாவை மோகன்பிரபு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.