லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-14 20:20 GMT

பண்ருட்டி,

பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மேற்பார்வையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் பண்ருட்டி அவுலியா நகர் 2-வது தெருவில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த நூர்முகமது (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 500 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாட்டரி சீட்டுகளை வீட்டில் பதுக்கி வைத்ததாக நூர்முகமது மனைவி பாத்திமா, மகன் சாதிக்பாஷா ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்