லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.;
அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று அக்னி பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள டீக்கடையில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த மணிவிளான் பகுதியை சேர்ந்த பகுருதீன் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.