லாட்டரி சீட்டு விற்றவர் கைது

ஜோலார்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைதுசெய்யப்பட்டார்.

Update: 2022-10-23 13:59 GMT

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையற்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஏலகிரி மலை அடிவாரம் பொன்னேரி டீக்கடை அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்தவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் பெரிய பொன்னேரி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 42) என்பதும், கேரளா மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 360 லாட்டரி சீட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிள், செல் போன், ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்