லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டனர்.;
தென்னிலை அருகே உள்ள செஞ்சேரி வலசு பகுதியில் உள்ள டீக்கடையில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் விற்பதாக தென்னிலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த தென்னிலை கொடுமுடி ரோடு பகுதியை சேர்ந்த துருவன் (வயது72) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.