லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-07-06 19:29 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேல குடியிருப்பு ரோட்டுத்தெரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக திரிந்த ஒருவரை ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு ரோட்டு தெருவை சேர்ந்த விஜயகுமார்(வயது 55) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்