லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

குமுளி பஸ் நிறுத்தம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-09-16 00:15 GMT

லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையில் போலீசார் தமிழக எல்லை குமுளி பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 55) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரத்து 200 மதிப்புள்ள 180 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்