லாட்டரி சீட்டு விற்றவர் கைது

திருவையாறு அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-08-13 20:50 GMT

திருவையாறு:

திருவையாறை அடுத்த பள்ளியக்ரஹாரம் ஜம்புகாவேரி வாய்கால் அருகே தஞ்சை மேலவீதியை சேர்ந்த மகேந்திரன் (வயது43) என்பவர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருப்பதாக நடுக்காவிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகேந்திரனை கைது செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்