லாட்டரி சீட்டு விற்றவர் கைது

காட்டுமன்னார்கோவில் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-08-07 18:45 GMT

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே ராஜேந்திரசோழகன் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி (வயது 37) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து ராஜீவ்காந்தியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த லட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.170-ஐ பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்