லாட்டரி விற்றவர் கைது

கோத்தகிரியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-10-23 00:45 IST

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் கோத்தகிரி சப் -இன்ஸ்பெக்டர் யாதவ கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பேன்சி கடை ஒன்றில் சிவகுமார் (வயது 39) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் வெளிமாநில லாட்டரிகளை விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்