மின்கம்பியில் லாரி உரசி டிரைவர் பலி

மின்கம்பியில் லாரி உரசி டிரைவர் பலியானார்;

Update: 2023-08-26 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் அருகே உள்ள கொத்தங்குளம் விலக்கு ரோட்டில் மண் அள்ளும் எந்திரத்தை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. லாரியை மதுரை மாவட்டம் கரடிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்து (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது மின்சார கம்பியில் ஜே.சி.பி. உரசியதில் லாரியில் மின்சாரம் பாய்ந்தது. அதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் முத்து சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். பின்பு திருப்பாச்சேத்தி மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்