லாரி- பொக்லின் எந்திரம் பறிமுதல்
அனுமதியின்றி மணல் ஏற்றிய லாரி- பொக்லின் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கபிஸ்தலம் அருகே உள்ள பவுண்டு பகுதி காவிரி தென்கரையில் அரசு அனுமதியின்றி பொக்லின் எந்திரம் மூலம் லாரியில் சிலர் மணல் ஏற்றிக்கொண்டு இருந்தனர். இவர்களை சுற்றி வளைத்த போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவா்கள் சிவகங்கை, பாளையங்கோவில் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி(வயது 48), கோபுராஜபுரம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ராஜா(30) என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் லாரி மற்றும் பொக்லின் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.